சென்னை அருகே மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ரமணா. 53 வயதாகும் இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு கட்டிகா நீர் வீழ்ச்சியில் 400 அடி உயரத்தில் இருந்து ராப்லிங் சாகசம் செய்துள்ளார். அதேபோல் மவுண்ட் கிளிமஞ்சாரோ சிகரம், இமயமலையில் பனிமலையில் ஏரி சாதனை செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தலைமுறையினர் இந்திய ராணுவத்தில் இணைய முன் வர வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டில் உள்ள 150அடி மலையில் இருந்து தேசியக் கொடியுடன் கண்களை கட்டிக்கொண்டு ரோப்லிங்க் மூலம் மேலிருந்து கீழே இறங்கினார்.
சமூக அக்கறையுடன் இதுபோன்று விழிப்புணர்வில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாக ரமணா தெரிவித்தார்.