ETV Bharat / state

வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்! - கோயில் நிலம் மாயம்

உலக பிரசித்தி பெற்றகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்

author img

By

Published : Sep 15, 2021, 6:36 AM IST

Updated : Sep 15, 2021, 2:38 PM IST

காஞ்சிபுரம்: உலகப் பிரிசித்தி பெற்றதும், அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதாராஜபெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.

கோயிலுக்குச் சொந்தமான நிலங்களின் விவரங்கள், அந்த நிலங்களில் இருந்து பெறப்படும் வாடகை பாக்கி விவரங்கள் அடங்கிய பதாகைகளை பக்தர்கள் தெரிந்தும் கொள்ளும் வகையில், கோயில் வளாகத்தில் பதாகைகளை கோயில் நிர்வாகம் வைக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மாயம்

அதன்படி, கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் பதாகைகள் வைக்கப்பட்டாலும், அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் மட்டும் இதுபோல் சொத்து விவரம் அடங்கிய பதாகைகள் வைக்கப்படவில்லை.

இதைத்தெடார்ந்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வரதராஜபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு இருக்கிறது எனக் கேட்டிருந்தார். அதற்கு, 448.33 ஏக்கர் நிலம் உள்ளதாக கோயில் நிர்வாகம் பதில் அளித்தது.

அதே கேள்வியை கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கோயில் நிர்வாகம், கோயிலுக்குச் சொந்தமாக 177.20 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கூறியிருந்தது.

இருவேறு நபர்கள் கேட்ட ஒரே கேள்விக்கு, கோயில் நிர்வாகம் அளித்துள்ள பதில் மூலம், சுமார் 2 ஆண்டுகளுக்குள் 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது, பக்தர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - மீட்டு தரக்கோரி ஹெச். ராஜா வலியுறுத்தல்

Last Updated : Sep 15, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.