ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே கொள்ளை முயற்சி - தப்பி சென்ற மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியில் கையில் பட்டாக்கத்தி உடன் வந்த இரண்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் பூட்டுகளை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். சப்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

தப்பி சென்ற மர்ம நபர்கள்
author img

By

Published : Apr 9, 2019, 8:56 AM IST

காஞ்சிபுரம் அருகே விநாயகபுரம் என்ற பகுதி உள்ளது. இதில் நடுத்தர அரசு ஊழியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றுவருகின்றன. புதியதாக வீடுகளை வாங்கிக் கொண்டு இப்பகுதியில் குடியேறுபவர்களை கவனத்தில் கொண்ட மர்ம நபர்கள் இங்கு பலமுறை கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு மர்ம நபர்கள் உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு இப்பகுதியில் உள்ள இரண்டு வீட்டின் கதவு பூட்டை உடைத்துள்ளனர். சப்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது இவர்கள் கத்தியை காண்பித்தும் கற்களை எடுத்து வீசியும் அவர்களை அச்சுறுத்தினர்.

இதனால் அச்சப்பட்ட அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இதனையடுத்து அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்த காரணத்தினால், அதில் பதிவான வீடியோக்களை எடுத்து பார்க்கும்போது, குறவர்கள் எனப்படும் இவர்கள் பிரபல கொள்ளையர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியில் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு கையில் பட்டாக்கத்தி உடன் வந்த 2 மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் பூட்டுகளை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி.சப்தம் கேட்டு மக்கள் வந்ததால் தப்பி ஓட்டம்.
--------------------------------------
காஞ்சிபுரம் அருகே விநாயகபுரம் என்ற நகர் விரிவாக்க பகுதி உள்ளது.இதில் நடுத்தர அரசு ஊழியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் கொள்ளைகள் அதிகம் நடந்து கொண்டே உள்ளது . அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இப்பகுதியில் உள்ள அதிகம் பேர் அரசாங்க ஊழியர்கள் . இப்பகுதியில் புதியதாக வீடுகளை வாங்கி கொண்டு குடியேறுபவர்கள். இதை கவனத்தில் கொண்ட மர்ம நபர்கள் இப்பகுதியில் பலமுறை நகைக்கொள்ளை, வீட்டின் கதவை உடைத்து கொள்ளை, வழிப்பறி போன்றவற்றை அரங்கேற்றியுழ்ளனர். நேற்று நள்ளிரவு 2 மர்ம நபர்கள் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு இப்பகுதியில் உள்ள இரண்டு வீட்டின் கதவு பூட்டை உடைத்துள்ளனர். சப்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது இவர்கள் கத்தியை காண்பித்தும் கற்களை எடுத்து வீசியும் அவர்களை அச்சுறுத்தினர். இதனால் அச்சப்பட்ட அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானர்.அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்த காரணத்தினால் அதில் பதிவான வீடியோக்களை எடுத்து பார்க்கும் போது குறவர்கள் எனப்படும் இவர்கள் பிரபல கொள்ளையர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த குறவர் இனத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்ற செய்தியை இப்பகுதி மக்கள் கேட்டதில் இப்பகுதியில் பரபரப்பு அதிகரித்துள்ளது.. சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Visual in ftp 

TN_KPM_2_8_CCTV ROWDY_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.