ஹைதராபாத்: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) இந்தியாவின் சமுத்திரயான் திட்டத்தின் கீழ் MATSYA 6000 நீர்மூழ்கியை உருவாக்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.
இந்த MATSYA 6000 நீர்மூழ்கி இயந்திரம், நீருக்கடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் கோள வடிவில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இது சுமார் 6.6 மீட்டர் நீளமும், 210 டன் எடையும், 6,000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
As a critical milestone in the indigenous efforts of the human submersible MATSYA 6000 realisation, the Factory Acceptance Test of the Human Support and Safety System (HS3) inside Crew module sphere of 2.1 m internal diameter was successfully completed.#MATYSA6000… pic.twitter.com/9O3loB6SK1
— MoES NIOT (@MoesNiot) October 26, 2024
வேதியியல் பல்லுயிர் மற்றும் நீர் வெப்ப துவாரங்கள் உள்பட ஆழ்கடல் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை கடலுக்கடியில் எடுத்து செல்வதே இதன் நோக்கமாக உள்ளது. மேலும், இந்த நீர்மூழ்கி வாயிலாக கடலுக்கு அடியில் இருக்கும் அரிய தாதுக்களையும் ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நீர்மூழ்கி இயந்திரம் நீருக்கடியில் 48 மணிநேர மூழ்கி இருந்து ஆராய்ச்சி செய்யக்கூடியவை. இதை கையாளுபவர்களுக்கான (மனிதன்) இடம், ஆராய்ச்சிக்கான கனிம மாதிரி தட்டு மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இதை கையாளுபவர்களுக்கென 2.1 மீட்டர் உள் விட்டம் கொண்ட தனிப் பகுதி உருவக்கப்பட்டுள்ளது. இந்த நீர்முழ்கி இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் ஊசி அமைப்பு, கார்பன் டை ஆக்சைடு அகற்றும் பொறிமுறை, சென்சார்கள், கட்டுப்பாட்டு வன்பொருள், தீ கண்காணிப்பு, அணைப்பான்கள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியது.
இதையும் படிங்க: SpaceX: ஏழு மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!
இந்த நீர்முழ்கி இயந்திரத்தை இயக்குவதற்காக முன்னாள் கடற்படை அலுவலர்கள், இரண்டு நியாட் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். இதை சமுத்திரயான் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரசெய்வதை குறிக்கோளாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
HS3 shall support three human beings for the normal submersible endurance of 12 hours and during an emergency for 96 hours with a controlled oxygen injection system, carbon-di-oxide removal mechanism, sensors, control hardware, fire surveillance, extinguisher, etc. The complete… pic.twitter.com/vytwWeW5I5
— MoES NIOT (@MoesNiot) October 26, 2024
இந்நிலையில் இந்த நீர்மூழ்கி இயந்திரம் மனிதர்களை பாதுகாப்பாக ஆழ்கடலில் கொண்டு சேர்க்கிறதா? ஆராய்ச்சியில் மனிதன் பாதுகாப்பாக ஆழ்கடலில் இருப்பதற்கு ஏதுவாக இது உள்ளதா? என மனித ஆதரவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கான (HS3) சோதனை முயற்சி இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற நிலையில், அதில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டத்தின் ஒரு முன்னேற்ற குறியீடாக பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையில் நீர்மூழ்கி இயந்திரம் சாதரண நிலையில் 12 மணிநேரமும், அவசர கால நிலைகளில் 96 மணிநேரம் வரை மூன்று நபர்களுடன் ஆய்வில் ஈடுபடுவதற்கு சரியானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ‘நியாட்’ தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சோதனை OEM யுனிக் குழுமத்தின் உதவியுடன் DNV மரைன் சர்வேயர் முன்னிலையில் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.