ETV Bharat / state

15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டுபிடிப்பு! - uthiramerur

உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருப்புலிவனம் கிராமம்
திருப்புலிவனம் கிராமம்
author img

By

Published : Jun 20, 2021, 2:01 PM IST

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால், 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது,

“எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்திலிருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த இரண்டு கற்களை கண்டறிந்தோம். இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்ததாகும் 50 செ.மீ. அகலமும், 75 செமீ உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 செ.மீ அகலமும், 70 செ.மீ உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது.

இதில் கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும், அதன் கீழ் பன்றி உருவமும் உள்ளது. இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும், அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குலச்சின்னமாக இருக்க வாய்ப்புள்ளது. இது 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை சூலக்கற்கள்

மன்னர் காலங்களில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள். இதற்கு சூலக்கற்கள் என்று பெயர். இந்நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக ஆலயங்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள்.

இது ஆலய நிதி வருவாய்க்கான ஏற்பாடாக இருந்தது. இதன் மூலம் அன்றாட பூசைகள் செய்தல், அமுது படைத்தல், ஆலய பராமரிப்பு பணிகள் முதலியவை மேற்கொள்ளப்பட்டன. இவ்வூரில் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிவன் ஆலயம் திருப்புலிவனமுடைய நாயனார் எனும் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

எனவே இது இவ்வாலயத்திற்கு கொடுத்த நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வூர் மக்கள் இதை இன்றும் எல்லைக்கல் என்றே அழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவறை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில், கழுதை மற்றும் நாயின் உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இவற்றில் இடம்பெற்றிருப்பதால் அரியதாகவே இவற்றை கருத வேண்டி உள்ளது. விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த புறா மற்றும் கழுதையை குலச்சின்னங்களாக கொண்டவர்கள், இந்தக் கோயிலுக்கு நிலம் வழங்கியதாக இருக்கக்கூடுமோ என கருதுகிறோம்.

இவ்வகை அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காத்திடுவது காலத்தின் கட்டாயமாகும். எனவே தமிழ்நாட்டின் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி இவற்றை பாதுகாத்திட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: HBD நக்கல் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.