ETV Bharat / state

1200 ஆண்டுகள் பழமை: நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமான ஜேஷ்டாதேவி சிலை கண்டுபிடிப்பு

காஞ்சிபுரத்தில் 1200 ஆண்டுகள் பழமையும், நந்திவர்ம பல்லவனின் குலதெய்வுமான 'மூத்த தேவி' சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1200-year-old-nandivarma-pallava-ancestral-idol-found-at-kanchipuram

author img

By

Published : Mar 21, 2022, 9:16 AM IST

Updated : Mar 21, 2022, 11:18 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பிடாரி கோயிலுக்கு செல்லும் வழியில், தலைகள் மட்டுமே தெரிந்தபடி மண்ணில் புதைந்துகிடந்த சிலையை, ஊர் பொதுமக்கள் முன்பு மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன், அந்த கிராமத்திற்கு விரைந்து சிலையை ஆய்வு செய்தார்.

ஜேஷ்டாதேவி சிலை குறித்த வீடியோ

அப்போது அந்த சிலை 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கொற்றவைஆதன் கூறுகையில், "இந்த சிலை 1200 ஆண்டுகள் பழமையும், நந்திவர்ம பல்லவனின் குலதெய்வுமான 'மூத்த தேவி' சிலை என்பதை உறுதிசெய்துள்ளோம்.

இதற்கு ஜேஷ்டாதேவி என்ற பெயரும் உண்டு. 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் வகையில் சிறப்பான வேலைப்பாடுகள் மூலம் ஆபரணங்களும், ஆடைகளுடன் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட தனது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் மகள் மாந்தியின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துடைப்பமும், காக்கை கொடியும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மூத்த தேவி சிலையின் தலையில் கரண்ட மகுடமும், காதில் பத்ர குண்டலமும், கழுத்தில் சரப்பளி ஆபரணமும், தோல்களில் வாகுவளையங்களும், கைகளில் வளையல்களும் கொண்டுள்ளபடி செதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கணக்கான மூத்த தேவி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மூத்த தேவி தனது மகன், மகளுடன் இருக்கும்படியான சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாலாஜாபாத் அருகே 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய சிவன் சிலை கண்டுபிடிப்பு

Last Updated : Mar 21, 2022, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.