கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஏரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று இருப்பதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தியாகதுருவம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவல் துறையினர் இளைஞர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் சட்டை காலரில் மண்ணாடிப்பட்டு என்ற ஒரு ஊரின் பெயர் இருந்தது
இதனை கண்ட காவல் துறையினர் இளைஞர் குறித்து தேடியபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மண்ணாடிப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறந்துபோன பழனிச்சாமியும், அவரது பெரியப்பாவின் மகன் வேலுவும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஸ்வீட் ஸ்டாலில் பணிபுரிந்துவந்தது தெரியவந்தது. பழனிச்சாமி கடந்த இரண்டு நாள்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார்.
இது குறித்து கொலை நடைபெற்ற இடத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பழனிச்சாமிக்கு மது அருந்தும் பழக்கமும், பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் பழக்கமும் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து உளுந்நூர்பேட்டை பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் சில பெண்களை காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இலுப்பையூர் கிராம காலனியைச் சேர்ந்த கோமதி என்ற பாலியல் தொழிலாளிக்கு இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. காவல் துறையினர் கோமதியை கைது செய்து விசாரித்துள்ளனர்.
அப்போது கடந்த 27ஆம் தேதி பழனிச்சாமியை அழைத்துக்கொண்டு கோமதி தியாகதுருகத்தை அடுத்துள்ள பிரிதிவிமங்கலம் ஏரிக்கு சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது கோமதி மதுவில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, மயங்கி விழுந்த பழனிச்சாமியின் சட்டை பையில் இருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ 2,000 பணத்தை எடுத்துக்கொண்டு, தன் புடவையில் பழனிச்சாமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல் துறையினர் கோமதியை கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க... திருமணம் ஆகாமல் மகள் கர்ப்பம் - கொலை செய்த பெற்றோர்