கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்துவந்தார்.
கரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களுக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
மூவருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் சூழலில், அடிக்கடி நித்யஸ்ரீயால் ஆன்லைன் வகுப்பை தொடரமுடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் ஒருபுறமிருக்க ஆத்தூரைச் சேர்ந்த ராமு என்ற இளைஞர் நித்யஸ்ரீயை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், உயிரிழந்த நித்யஸ்ரீயின் உடலை மயானத்தில் எரியூட்டப்பட்டபோது ராமு அங்கு சென்று, யாரும் இல்லாதபோது தானும் தீயில் குதித்து எரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கேற்றது போல் ராமுவையும் காணவில்லை.
இதனால் ராமுவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவலர்கள் தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து மயானத்தில் எரிந்த எலும்புகளைச் சோதனையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருதலைக்காதலால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!