ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவரம்... 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ் - கள்ளக்குறிச்சி கலவரம்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடியதாகவும், காவல் துறை வாகனத்திற்குத் தீ வைத்ததாகவும் கைதான நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

Etv Bharat கள்ளக்குறிச்சி கலவரம்
Etv Bharat கள்ளக்குறிச்சி கலவரம்
author img

By

Published : Aug 29, 2022, 10:50 PM IST

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 360 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலவரத்தின்போது மாட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மாடுகளை திருடிச் சென்றதாகவும் மற்றும் காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன் மற்றும் சஞ்சீவி ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களுக்கு ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பிடிவாரண்டில் உள்ள மீரா மிதுன் தலைமறைவாகினார்... சென்னை போலீசார் நீதிமன்றத்தில் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.