கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருதங்குடி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கமலாம்மாள் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கு சகுந்தலா எனும் பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. மருமகள் சகுந்தலாவிற்கும், மாமியார் கமலாம்பாளுக்கும் மது விற்பனை செய்வது தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சகுந்தலா தொடர்ச்சியாக கமலாம்பாளை மது விற்கவிடாமல் தடுத்துள்ளார்.
இதையடுத்து சில மாதங்களாக மது விற்பனையில் ஈடுபடாமல் இருந்த கமலாம்பாள், பொங்கலையொட்டி மீண்டும் தனது தொழிலை தொடங்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள், கமலாம்பாளின் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கீற்று கொட்டகையை நேற்று (ஜன.16) கலைத்தனர்.
தகவலறிந்த திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் இன்று (ஜன.17) காலை கமலாம்பாளை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அவமானமடைந்த மருமகள் சகுந்தலா மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலையால் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலப்பந்தல் காவல் துறையினர், சகுந்தலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் சகுந்தலாவின் உறவினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், சகுந்தலாவின் உடலை உடற்கூராய்விற்கு தரவில்லை. அவருடைய உயிரிழப்பில் சந்தேகமும் இல்லை என எழுதிக்கொடுத்தனர். அதன் பின்னர் போலிசார் அங்கிருந்து சென்றனர்.
இதையும் படிங்க:காணாமல் போன இளைஞர் தனியார் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு!