கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த செல்லப்பெருமாள், தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் நேற்றிரவு (நவ.16) தன் வீட்டிலுள்ள கொட்டகையில் வாகனத்தை நிறுத்தியிருக்கிறார். காலையில் எழுந்து பார்க்கும்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் எரிந்த நிலையில் சேதமாகி கிடந்துள்ளன.
![கொட்டகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9567779_thu.jpg)
செல்லப்பெருமாள் இது தொடர்பாக உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
![தீ வைக்கப்பட்ட வாகனங்க்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9567779_th.jpg)
செல்லப்பெருமாள் விருத்தாசலம் சாலையில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் தொழில் செய்வதோடு ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார். இது தொடர்பான முன்விரோதத்தில் யாரேனும் அவரது இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:என்எல்சி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு