கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மகளிர் குழுவினர் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து வாரத் தண்டல் எடுத்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால், தனியார் பைனான்ஸ் கம்பெனிகள் தங்களிடம் வாரத் தண்டல் எடுத்த பெண்களிடம் பணத்தைக் கட்டுமாறு நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகளிர் குழுவினர், நாங்கள் யாரும் ஊரடங்கினால் வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள்ளே இருக்கிறோம். அதனால் வருவாய் இல்லாமல் பணம் கட்ட முடியவில்லை என்றனர். பணம் வசூலிக்க ஊழியர்கள் பெண்களை ஆவேசமாக திட்டி உடனே பணம் கட்டவில்லை என்றால் வட்டி மேல் வட்டி போட்டு வசூல் செய்வோம் என்று மிரட்டலாகக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மகளிர் குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இதையும் படிங்க... ஊரடங்கு உத்தரவு! பரிதவிக்கும் ஓட்டுநர்கள்; பாடாய்படுத்தும் பைனான்ஸ் நிறுவனங்கள்