கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கல்வராயன் மலை அடிவாரப் பகுதியான மல்லாபுரம், ஆனை மடுவு, மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடுகள் உள்ளது. இங்கு மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமில்லாமல் மயில் உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.
இந்நிலையில் மல்லாபுரம் பாப்பாத்தி மூளை ஓடை பகுதியில் மர்மமான முறையில் 11- க்கும் மேற்பட்ட மயில்கள் திடீரென உயிரிழந்தது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், மயில்களை மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு கூறப்படுகிறது. அதில் குருணை மருந்து சாப்பிட்டதால் 11 மயில்களும் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.
இதுதொடர்பான விசாரணையில், மக்காச்சோளம் பயிரில் குருணை மருந்தை வைத்த அதே கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், சுப்பிரமணி ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர், அவர்களை திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு; பணியாளர் செய்த துரோகம்