ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் இருதரப்பினரிடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு - Sickle cut for 6 people in Ulundurpet

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பிரகாசம் நகரில் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக் கொண்டதில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டையில் இருதரப்பினரிடையே மோதல்

author img

By

Published : Aug 4, 2021, 11:52 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பிரகாஷ் நகர்ப் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டு அது முற்றியதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொண்டனர்.

இதில் ஆறு பேர் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலை முடியை கலாய்த்த இருவரை அடித்துக் கொன்ற கும்பல் - ஏனாமில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.