விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கப்படும் என்றும், மருத்துவமனை கட்டுவதற்கு சிறுவங்கூர் சமத்துவபுரம் எதிரில் அமைத்துள்ள அரசு கலைக்கல்லூரி இயங்கி வந்த இடத்தில் 28 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் 10,72,800 சதுர அடி பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.382 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 4) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் முன்னாள் அமைச்சர் பா.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவமனை வளாகத்தில் கீழ்க்கண்ட கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
மருத்துவனை வளாகம்- 700 படுக்கை வசதி கொண்ட கட்டடம்,
சமையறை கட்டடம்,
CRRI மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் விடுதிகள்,
மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் உதவி மருத்துவ நிலைய அலுவலர் குடியிருப்பு,
செவிலியர்கள் விடுதி,
பிணவறை கட்டடம்,
இதன்மொத்த தளப்பரப்பு 46,253 சதுர மீட்டர் (அ) 4,97,690 சதுர அடிகள் ஆகும்.
மருத்துவக்கல்லூரி வளாகம்:
இயல் கூடம்,
கருத்தரங்க கூடம்,
நிர்வாக அலுவலகம்,
பணிமனை கட்டடம்,
வங்கி மற்றும் தபால் நிலைய கட்டடம்,
சிற்றுண்டி மற்றும் உடற்பயிற்சி கட்டடம்,
இதன் மொத்த தளப்பரப்பு 34,807 சதுர மீட்டர் (அ) 3,74,530 சதுர அடிகள்
ஆகும்.
குடியிருப்பு வளாகம்:
இதன் மொத்த தளப்பரப்பு 18,641 சதுர மீட்டர் (அ) 2,00,580 சதுர
அடி பரப்பளவில் அமைய உள்ளது.