கள்ளக்குறிச்சியை கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி 33ஆவது மாவட்டமாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். பின்னர் 2019 நவம்பர் 12ஆம் தேதியன்று விழுப்புரத்திலிருந்து பிரித்து அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் -கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக இன்று (அக். 23)அடிக்கல் நாட்டினர்.
சுமார் ரூ.104 கோடி செலவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கல்!