கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மடப்பட்டு பகுதியில் சுதந்திர தினமான நேற்றும் (ஆக.15) முழு ஊரடங்கான இன்றும் (ஆக.16) விற்பனை செய்ய, மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹர்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர், அப்பகுதியில் வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது, மூன்று வீடுகளிலிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இருவரை கைது செய்த காவல் துறையினர், உளுந்தூர்பேட்டை இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது