கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஷேக்பகதூர் என்பவரது மகன் அஸ்கர் அலி (41). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவருகிறார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கடைக்கு பொருள்கள் வாங்க வந்த ஒன்றாம் வகுப்பு சிறுமியிடம் அஸ்கர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வலி தாங்கமுடியாமல் அழுதச் சிறுமியிடம் கடையில் நடந்த சம்பவம் குறித்து எவரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.
![thirukovilur man arrested under POSCO for sexual harassment of girl](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-klk-04-thirukovilur-posco-askarali-pic-tn10026_24022020153719_2402f_1582538839_294.jpg)
இதன்பின்னர் வீட்டிற்குச் சென்ற சிறுமி வலி தாங்கமுடியாமல் அழுததைக் கவனித்த பெற்றோர், என்ன நடந்தது என்று குழந்தையிடம் விசாரித்ததில் அவர் நடந்தைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை இன்று போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.
இதையும் படிங்க: மகளைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற தந்தை போக்சோவில் கைது