ETV Bharat / state

உளுந்தூர்பேட்டையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்! - Kallakkurichi District News

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் அதிவேகமாக சென்ற காரானது இயந்திர கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென தீபற்றிய கார்
திடீரென தீபற்றிய கார்
author img

By

Published : Sep 1, 2020, 7:26 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள உறவினரை அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரானது உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள வளைவு பகுதியில் செல்லும் போது காரின் முன்பகுதியில் உள்ள இயந்திரம் திடீரென கோளாறு ஏற்பட்டு பேட்டரி பகுதியில் இருந்த ஒயர் உரசி இஞ்சின் காரின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

இதனை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி, காரை சாலையின் இடது புறமாக நிறுத்தி வைத்துவிட்டு உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரின் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்து காரணமாக உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.