கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் தடுப்பணையில் கடந்த எட்டு நாளுக்கு முன்னர் வெள்ளத்தில் வரதராஜ், ராஜ்குமார், அஸ்விந்த் ஆகிய மூன்று சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் வரதராஜ், ராஜ்குமார் மீட்கப்பட்ட நிலையில் வரதராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கருணாபுரம் தடுப்பணை பகுதியில் நடைபெற்றுவரும் மீட்கும் பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் நேரில் ஆய்வுமேற்கொண்டுள்ளார். ட்ரோன் கேமரா மூலம் மீட்புப் பணிகளை ஆய்வுமேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எட்டாவது நாளான இன்று (டிச. 11) இயற்கை உபாதை கழிக்கச் சென்ற கருணாபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுவனின் சடலம் முள்ளில் சிக்கியபடி கிடந்துள்ளதைப் பார்த்துள்ளர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கரை ஒதுங்கிய சிறுவன் உடலை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: தாய், கணவனின் மன அழுத்தத்தால் சித்ரா தற்கொலை?