தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக வீட்டிலிருந்தபடியே பாடங்களை கற்கும் விதமாகப் பல்வேறு செயல்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொலிப்பாடங்களை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று(ஜூலை15) வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில் புரிபவர்களுக்கு கோவிட்-19 சிறப்பு நிதி உதவித் தொகுப்பு பயனாளிகளுக்கு காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இவ்விழாவில் இதில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் செயல் அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.