முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்திவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரைக கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்.