ETV Bharat / state

சின்னசேலம் காவல் நிலையங்களில் எஸ்பி ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு! - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சின்னசேலம் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் சென்று இன்று (டிச.18) ஆய்வு செய்தார்.

SP advice to police officers
SP advice to police officers
author img

By

Published : Dec 18, 2020, 9:49 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குற்ற பதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், காவலர் வருகைப்பதிவேடு போன்ற பதிவுகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக், காவல்நிலைய வளாகத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும் என்றும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் தொடர்ந்து சின்னசேலம், கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.