கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவருக்கு குபேந்திரன் என்ற மகன் உள்ளார். சீனிவாசன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை பழக்கமாக வைத்திருந்தார்.
அந்தவகையில், சீனிவாசன் குடிபோதையில் சாலையில் வருவதைப் பார்த்த அவரது மகன், கண்டித்துள்ளார். போதையில் இருந்த அவர், கோபத்தில் மகனை அடிக்க கை ஓங்கியுள்ளார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பொதுவெளி என்று பார்க்காமல் தந்தையை மகன் அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், மதுவில் விஷத்தை கலந்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக, அவரை அக்கம்பக்கத்தினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து அவரது மகனிடம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தையை கொன்றுவிட்டோம் என நினைத்த குபேந்திரன், வீட்டில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இது குறித்து எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோவில் ஒருவர் கைது