ETV Bharat / state

டிரான்ஸ்ஃபார்மரில் காப்பர் கம்பி திருடிய லைன் மேன் உட்பட 7 பேர் கைது: சிக்கியது எப்படி? - Electricity Board employee arrested

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக டிரான்ஸ்ஃபார்மர் பெட்டியை உடைத்து காப்பர் கம்பி, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிரான்ஸ்பார்மர் பெட்டியில் திருட்டு
டிரான்ஸ்பார்மர் பெட்டியில் திருட்டு
author img

By

Published : Feb 7, 2023, 3:24 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு விவசாய நிலத்திற்கு செல்லும் டிரான்ஸ்ஃபார்மர் லைனை அணைத்து விட்டு, 2 பெட்டியை உடைத்து, அதில் இருக்கும் காப்பர் கம்பிகளை உடைத்து திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தும், பின்னர் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த தீவிர விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்ஃபார்மர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்த போலீசார், ரிஷிவந்தியம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (19), விக்கி (21), ஆட்டோ ஓட்டுநர் சொகத்அலி (27) ஆகிய மூவரையும் கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, போலீஸாரின் தீவிர விசாரணையில் மூவரும் அளித்த தகவலானது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அந்த செய்தியைக் கேட்ட தனிப்படை போலீசார் இவர்களுக்கு திருடுவதற்கு பயிற்சி அளித்து வந்த கள்ளக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் லைன் மேன் இப்ராஹிம் (35), திருட்டுப் பொருட்களை வாங்கி விற்கும் இரும்புக்கடை முதலாளிகள் தியாக துருகத்தைச் சேர்ந்த ஜாஃபர் (39), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முனிராஜா (39), ஆனந்த் (40) உள்ளிட்ட ஏழு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலிடமிருந்து, 1 ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனம் திருடுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், 200 கிலோ விலை உயர்ந்த காப்பர் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் பெட்டிகளை உடைத்து அதில் இருக்கும், காப்பர் பொருட்களை எடுத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை மற்றும் திருக்கோவிலூர் போலீசாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடையில் தகராறு செய்தவர்களை இரும்பு ஆயுதங்களால் தாக்கிய வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.