கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பாவளம் கிராமத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வருவாய்த்துறையின் மூலம் 70 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் பட்டா வழங்கிய இடத்திற்கான கணக்குகள் குறித்து வருவாய்த்துறையின் பதிவேட்டில் சேர்க்காமலும் இடத்தை அளந்து கொடுக்காமலும் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மனை பட்டா பெற்ற பயனாளிகள் பலமுறை அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அலுவலர்களின் இந்த மெத்தன போக்கைக் கண்டித்து கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்று ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விரைவில் மனைப்பட்டா பெற்ற பயனாளிகளுக்கு அவரவர் இடத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க... இலவச வீட்டு மனைப் பட்டா, பசுமை வீடுகள் வழங்கக் கோரி திருநங்கைகள் மனு!