கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சவுதி அரேபியாவிற்கு கட்டட வேலைக்காக சென்றுள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், பெரியசாமி , சுதாகர் என்னும் 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் ஒரு வாரத்திற்கு முன்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக பரமேஸ்வரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பரமேஸ்வரி தனது கணவர் ராமச்சந்திரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: செயின் பறிக்க வந்த கொள்ளையர்களை துடைப்பத்தால் துரத்திய மூதாட்டி