ETV Bharat / state

ரஜினியின் அரசியல் பிரவேசம் - கொட்டும் மழையிலும் குறையாத ரசிகர்கள் கொண்டாட்டம் - rajini kanth

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் கனமழையிலும் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
author img

By

Published : Dec 3, 2020, 7:07 PM IST

கள்ளக்குறிச்சி: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, நடிகர் ரஜினி இன்று (டிசம்பர் 3) தனது ட்விட்டர் பக்கத்தில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பு குறித்து ஜனவரி மாதம் தேதியை வெளியிடப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வெடி வெடித்து நடனம் ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் கன மழையையும் பொருட்படுத்தாது, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதையும் படிங்க: குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பது ரஜினியின் அதீத நம்பிக்கை: திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.