கள்ளக்குறிச்சி: அருகே உளுந்தூர்பேட்டை வழியாக ஆந்திரா மாநிலத்தில் இருந்த கேரளாவிற்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்ற லாரியை பிடித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று லாரியை சோதனை செய்ததில் விதிமுறைகளை மீறி மாடுகளை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து 55 எருமை மாடுகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அரசு விதிமுறைகளை மீறி மாடுகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு