கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டோரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவா (எ) வினோத் வீடியோ ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்தை இயக்கிய அங்கிருந்த மற்றொரு பேருந்து மீது மோதி சேதப்படுத்தியவர்.
இவரை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கனியாமூர் கலவரம் தொடர்பாக இதுவரை 367 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்... 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்