கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி புதியதாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது உளுந்தூர்பேட்டை தாலுகாவுக்குட்பட்ட கருவேப்பிலைப்பாளையம் கிராமம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் உள்ள மக்களின் விவசாய நிலங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில் உள்ளதால், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கார் வழிமறிப்பு
இதனிடையே இன்று (ஜூலை.22) உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காரை வழிமறித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்ததன் பேரில், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மகளின் இறப்பில் சந்தேகம்- சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு