ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகளும் அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகளும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

author img

By

Published : Jul 25, 2022, 9:55 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தை அடுத்துள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “அந்த பள்ளியில் பயின்று வரும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நலன் கருதி வரும் புதன்கிழமை முதல் அனைத்து மாணவர்களுக்கும் அதே பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்.

9,10,11,12, ஆகிய வகுப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அந்தப் பள்ளியைச் சுற்றி அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து வசதி, இட வசதி போன்றவற்றை செய்து தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

நாளை நிர்வாக தரப்பு மற்றும் அந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்த பள்ளியிலே படிப்பை தொடர்வதாக இருந்தாலும் வேறு ஏதேனும் மாற்றுப் பள்ளிகளுக்கு செல்ல விரும்பினால் அந்த மாணவர்களுக்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து மாணவிகளுக்கு பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் ரீதியான தொந்தரவுகளை யாரிடமும் சொல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டிகளை வகுப்பறையில் வைக்கப்பட்டு தங்கள் புகார்களை அதில் தெரிவிக்கலாம். அதிலும் தெரிவிக்க முடியாத மாணவச் செல்வங்களுக்கு என தனி இணையதளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அந்த இணையதளத்தில் தங்களால் சொல்ல முடியாத சம்பவங்களையும் பள்ளியில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளையும் பதிவு செய்யலாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.