கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் பொருளாதாரம், ஊழல் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா முன்னிலையில் "நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நம்புகிறேன், அரசு குடிமக்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்" என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க... ஹத்ராஸ் பாலியல் வழக்கு: நீதி கிடைக்கும்வரை செருப்பு அணிய மாட்டேன்!