கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத் துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமார் 752 பயனாளிகளுக்கு நான்கு கோடியே 95 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி, தாலிக்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாட்டின் இறையாண்மையில் தலையிட்டால் உங்கள் மொழியிலேயே பதிலடி- அமித் ஷா