கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் 26 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 60 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா தொற்று சிசிச்சை மையத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று(ஜூன்.7) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெளதமசிகாமணி, சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார், ரிசிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திக்கேயன், சுகாதாரப் பணி இயக்குனர் சண்முககனி உட்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பயமா? எனக்கா? தனியாளாக சடலங்களை தகனம் செய்யும் இஸ்லாமிய பெண்