கள்ளக்குறிச்சி மாவட்டம் மகரூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும், ஊரை ஒட்டியுள்ள மயூரா ஆற்றை கடந்து அருகிலுள்ள அசகளத்தூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் அல்லது வனத்துறை வழியாக செல்லும் சாலையின் வழியாகத்தான் வெளியூர் செல்ல வேண்டும்.
மேலும் வனத்துறையின் கெடுபிடியால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீர் செய்யப்படாமல் பழுதடைந்ததால் ஆற்றை கடந்து வெளியூர் சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.9) முதல் பெய்து வந்த கன மழையால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே அரசு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும், இல்லையெனில் அந்தக் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயம்புத்தூரில் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்