கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (30). இவர் பாலியல் குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வண்ணம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிரன் குரலா, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி இன்று எலவனாசூர்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் எழிலரசி, செல்வமணியை கைதுசெய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இதையும் படிங்க... சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது