கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு வந்த ரகசிய தகவலின்படி உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரு நபர்களிடம் காவல்துறையினர் நெருங்கியபோது இருவரும் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், உளுந்தூர்பேட்டை காட்டு நெமிலியை சேர்ந்த வாசு என்பது தெரியவந்தது. இவர்கள் நீண்ட நாட்களாக தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து, இவர்களை கைது செய்து இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.