ETV Bharat / state

சங்கராபுரம் அருகே ரூ.33 லட்சத்துக்கு சாராயக்கடை ஏலம்?

சங்காரபுரம் அருகே மலை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 33 லட்சத்திற்கு சராயக்கடை நடத்த ஏலம் எடுத்துள்ளார்.

liquor-store-auction-for-rs-33-lakh-near-sankarapuram சங்கராபுரம் அருகே ரூ.33 லட்சத்துக்கு சாராயக்கடை ஏலம்

author img

By

Published : May 16, 2022, 12:37 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புளியங்கொட்டை இந்த கிரமமானது, கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.மேலும் கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டு, புளியங்கொட்டை, புதுபட்டு, இரங்கப்பனூர் கொடியனூர்,மற்றும் இதனைச் சுற்றியுள்ள பத்து மேற்பட்ட கிராமத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சாராயம் விற்பனை செய்ய ஆண்டு தோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுப்பவரே அந்த கிராமத்தில் ஓராண்டுக்கு சாராயம் விற்க முடியும். வேறு யாருக்கும் சாராயம் விற்க அனுமதி கிடையாது. அதன்படி இந்த ஆண்டு புளியங்கொட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்கான ஏலம், கிராமத்தின் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் முன்னிலையில் நடந்ததாக கூறப்படுகிறது.

சாராயம் விற்பதற்கு ஏலம் எடுக்க அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் சாராய வியாபாரிகள் பலர் போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர். இதன் முடிவில் 35 வயதுடைய பெண் வியாபாரி, சாராயம் விற்பனை செய்யும் உரிமையை ரூ.33 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

சாராயம் ஏலம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடி: 20 ஆண்டுகளாக கொடிகட்டிப்பறந்த சாராய விற்பனை - 7 பேரைக் கைது செய்து முடித்துவிட்ட போலீசார்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.