ETV Bharat / state

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தொடங்கியது சித்திரை திருவிழா - கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடங்கியது சித்திரை திருவிழா
தொடங்கியது சித்திரை திருவிழா
author img

By

Published : Apr 6, 2022, 12:22 PM IST

Updated : Apr 6, 2022, 12:50 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நேற்று (ஏப்ரல் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை சாகை வார்த்தல் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18 ஆம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 2022 ஆம் ஆண்டின் மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி திருத்தேர் வீதியுலா, அரவான் களப்பலி நடக்கிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி காலை தேரோட்டம் தொடங்கி பந்தலடி சென்று அங்கு அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் விதவை கோலம் பூண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

தொடங்கியது சித்திரை திருவிழா

ஏப்ரல் 21 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: சித்திரை திருவிழா- மாஸ் காட்டிய மதுரையின் மாசி வீதிகள்!

Last Updated : Apr 6, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.