கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஏப்.19) விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.20) காலை பிரமாண்ட தேரில் அரவானின் சிரசம் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.
பின்னர் அருகில் உள்ள அழிகளம் நோக்கி அரவான் சிரசம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருநங்கைகள் தங்களது தாலிகளை அறுத்து வெள்ளைப் புடவை உடுத்தி ஒப்பாரி பாடல்களை பாடினர்.
ஆடல், பாடல், அழகிப்போட்டி என களைகட்டிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா அழுகையுடன் நிறைவு பெற்றது. திருநங்கைகள் தங்கள் சக தோழிகளிடம் பிரியா விடைபெற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: Video: சித்திரைத் திருவிழா: அட்சயலிங்க சுவாமி திருக்கோயிலில் தெப்ப உற்சவம்