ETV Bharat / state

காமராஜர் கைகளாலே வரைய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய் பகுதி நேர ஆசிரியர்! - chennai news

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியரின் மாணவர்கள், அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர்
பெருந்தலைவர் காமராஜர் எழுதிய வசனம்
author img

By

Published : Jul 15, 2023, 11:05 AM IST

பெருந்தலைவர் காமராஜர் எழுதிய வசனம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் செல்வம் என்பவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் முன்னிட்டு காமராஜர் சொல்வது போன்ற அரசுப் பள்ளி வாசகத்தை எழுதி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டும், மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணலூர்பேட்டை அருகில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் இருக்கும் காமராஜர் சிலையின் கையில் பிரஷ் வைத்து வரைந்துள்ளார்.

அந்த பிரஷில் நீர்வண்ணத்தை தொட்டு சார்ட் அட்டையை அசைத்து, அசைத்து "அரசுப்பள்ளி மக்கள் பள்ளி" என்ற வாசகத்தை காமராஜர் எழுதுவது போன்றும், சொல்கிற மாதிரியும் ஓவிய ஆசிரியர் செல்வம் ஐந்து நிமிடங்களில் எழுதி உள்ளார்.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வியின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய ஓவிய ஆசிரியரின் செயல் அப்பகுதி மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: யானை குறித்து 20 நாட்களாக எந்த தகவலும் இல்லை - ஆட்சியரிடம் அரிசி கொம்பன் ஃபேன்ஸ் மனு!

கல்வி வளர்ச்சி நாள்: தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று (ஜூலை 15) ‘கல்வி வளர்ச்சி தினமாக’ கடந்த 2006 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காமராஜர் முதலமைச்சர் ஆனதும், சாதி, மதம் வேறுபாடு இன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.

சுமார் ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்த காமராஜர், பள்ளிகள் இல்லாத ஊர்களில் எல்லாம் பள்ளிகளை திறந்து வைத்தார். ‘ஏழைக் குழந்தைகள் கல்வி பெற கையேந்தி பிச்சை எடுக்கவும் தயார். தான் படிக்கா விட்டாலும் இந்த தேசம் படிக்க வேண்டும்’ என்று நினைத்தவர்.

எந்த சொத்து இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை பெற்று விட்டாலே வறுமை தானாக ஒழிந்து விடும் என்பது காமராஜரின் எண்ணம்.

மதிய உணவுத் திட்டம்: காமராஜர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்குச் செல்லவில்லையா என்று கேட்டதற்கு, ‘சாப்பாடு தருவீங்களா’ என்ற குழந்தையின் எதிர் கேள்வியை காமராஜரின் மனதில் கொண்டு வந்தது இலவச மதிய உணவுத் திட்டம் என்னும் பதில். மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் வந்த பிறகு, இடைநிற்றல் குறைந்து, கல்வி கற்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது. கல்வியில் புரட்சி செய்த காமராஜரின் அரும் பணி காலத்தால் மறக்க இயலாது.

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலனைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டன - லஞ்ச ஒழிப்புத்துறையின் தகவலால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.