கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் யூனியன் ஆபீஸ் அருகில் அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி ஷாப் உள்ளது. இந்த பேக்கரி கடையை கேரளாவை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கடைக்கு வந்த இரண்டு பெண்கள் பப்ஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளனர்.
அப்போது வாங்கி சென்ற அந்த பப்ஸை பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகின்ற நிலையில்,குழந்தைகள் சாப்பிட்ட அந்த பப்ஸ்சை அந்தப் பெண்கள் சாப்பிட்ட போது அது வழவழப்பாகக் கெட்டுப்போய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பப்ஸ் வாங்கி சென்ற அந்த இரண்டு பெண்களும் நேற்று(மே 15) சின்னசேலத்தில் உள்ள அந்த அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி ஷாப்புக்கு வந்துள்ளனர். அங்கு வந்த கெட்டுப்போன பப்ஸை விற்று ஏன் காசு பார்க்கிறீர்கள்,எனகடைக்காரர்களை கேள்விமேல் கேள்வி கேட்டு தகராறு செய்து தெறிக்கவிட்டுள்ளனர்.
காசு பார்க்க வேண்டும் என்பதற்காகக் கெட்டுப்போன எதை வேண்டுமானாலும் நீங்கள் விற்கலாம் என நினைக்கிறீர்களா? எனவும் கேட்டு ஆவேசப் பட்டுள்ளனர். மேலும் பப்ஸ் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது என்றும், அப்படி ஏதாவது நடந்தால் உங்களை சும்மா விட மாட்டோம் எனவும் அவர்கள் கடைக்காரர்களை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது அந்த கடையில் வாடிக்கையாளர்களாக வந்த சிலர் பெண்கள் ஆவேசப்பட்டுப் பேசி சண்டையிடுவதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
தவறு செய்பவர்களை கேள்வி கேட்க வேண்டும் என்றும், காசுக்காக பழைய கெட்டுப்போன காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவரக்ள் மீது உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க:மானை வேட்டையாடிய நாய்கள்- அதிர்ச்சி வீடியோ