கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த 13ஆம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன்னதாக எழுதிய கடிதம் என ஒரு கடிதம் வைரலாகப் பரவி வருகிறது. அதில்,
”நான் நல்லா தான் படிப்பேன், ஆனால் கெமிஸ்ட்ரி மட்டும் ஒழுங்கா வரல. அதனால கெமிஸ்ட்ரி மிஸ் ரொம்ப பிரஷர் போடுறாங்க, அது எல்லா டீச்சருக்கும் தெரிஞ்சிடுச்சி, எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு எங்க வீட்ல கட்டுன ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் எங்க அம்மா கிட்ட திருப்பி கொடுத்திடுங்க. நான் அங்க இருந்ததே கொஞ்ச நாள் தான். என்ன மன்னிச்சிருங்க அம்மா, அப்பா” என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி முன்பு கலவரம்: முதற்கட்டமாக 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!