கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள புதுஉச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை.26)கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இரவு பெய்த தொடர் மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் அங்க வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மழையில் நனைந்து முற்றிலும் வீணாகி உள்ளது பள்ளி மாணவர்களும் கீழ அமர்ந்து படிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மற்றும் வளாகத்தினை சீர் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவிகள் மோதல் - வைரலாகும் வீடியோ