கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவா மாநிலத்தில் உள்ள பஞ்சிம்கோவா என்ற இடத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
தற்போது இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் தமிழ்நாடு வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு இல்லாமலும், பசியோடும் உள்ளனர்.
இதனால் சொந்த ஊருக்கு அழைத்து வர, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: சென்னை காவல் துறையினரின் புதிய நடவடிக்கை