சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. தளர்வுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் பலர் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர். இதன் காரணமாக, கரோனா தொற்றின் பரவல் மேலும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (மே 24) முதல் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில், அவசியமின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினார்.
அதன்பின் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் காய்கறிகள் விநியோகம் செய்யும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமின்றி வெளியே சுற்றிதிரிபவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது'