கள்ளக்குறிச்சி: பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 11ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மேலும் தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ராயக்கோட்டை தூர்வாசன் சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் .
தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்த 3 பெண்களிடம் இருந்து சுமார் 20 பவுன் மதிப்புள்ள தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி தற்கொலை