கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாரனோடை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
ஏரியிலிருந்து விவசாய நிலங்களுக்கு வரும் நீர் வரத்து, வாய்க்கால் தூர்வாரப்படாததால் வராமல் போனது. மேலும் வாய்க்காலை தூர்வார கோரி விவசாயிகள் திருநாவலூர் ஒன்றிய வட்டார அலுவலரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும், இது சம்பந்தமாக அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றுகூடி வாய்க்காலை தூர்வாரினர்.
இதையும் படிங்க: காளியாகுடி வடிகால் வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!