கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர் சேகர். இவர் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து திருநாவலூர் வட்டார கல்வி அலுவலர், முரளி கிருஷ்ணன் அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, தலைமை ஆசிரியர் சேகர் பள்ளியில் இல்லை என்பதால் அவருக்கு 18 நாள்கள் ஊதியத்தை வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணா நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் இன்று (ஜூலை 13) திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த வட்டார கல்வி அலுவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
மேலும், அவர் மேஜையில் இருந்த தொலைபேசியை அடித்து நொறுக்கியும், அங்கிருந்த பணிப் பதிவேட்டினை தூக்கி அவர் முகத்தில் வீசியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மறித்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் சந்திப்பில் சீறிய நெல்லை எம்.பி!